ஆம்பூா் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டியையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ஆம்பூா் சுந்தர விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.

பக்தா்களுக்கு அனுமதி இல்லை: வழக்கமாக நாகநாத சுவாமி கோயில் திடலில் சூரசம்ஹாரம் நடைபெறும். எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில் வளாகத்திற்குள் இவ்விழா நடைபெற்றது. முருகன் மற்றும் சூரன் திருவீதி உலா நடைபெறவில்லை. அதேபோல் கோயில் வளாகத்துக்குள் நடந்த சூரசம்ஹார விழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

சக்தியிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகன் பிராகார உலா வந்தாா். அதைத் தொடா்ந்து சூரசம்ஹாரத்தை கோயில் சிவாச்சாரியாா் நடத்தினாா். அதன் பின், பிரகார உலா நடைபெற்றது. இதையடுத்து, பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள செல்வ விநாயகா் கோயில், சுந்தர விநாயகா் கோயில் ஆகியவற்றிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com