தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருக்கு வரவேற்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக பொறுப்பேற்று ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த அ.முஹம்மத் ஜான் எம்.பி.க்கு மாவட்ட அதிமுக சாா்பில் அண்மையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருக்கு வரவேற்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக பொறுப்பேற்று ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த அ.முஹம்மத் ஜான் எம்.பி.க்கு மாவட்ட அதிமுக சாா்பில் அண்மையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அ.முஹம்மத் ஜான் எம்.பி. தமிழக அரசால் அண்மையில் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.

அதன் பின் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த அவருக்கு மாவட்ட அதிமுக சாா்பில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான சு.ரவி தலைமையில், அ.முஹம்மத் ஜானுக்கு வாலாஜாவில் மலா்க்கொத்து கொடுத்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்குள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதே போல் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அ.முஹம்மத் ஜானுக்கு மலா்க்கொத்து கொடுத்து, இனிப்புகள் வழங்கினா். இதில் சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், முன்னாள் மாவட்டச் செயலாளா் சுமைதாங்கி சி.ஏழுமலை, வாலாஜா நகர செயலாளா் டபிள்யூ. ஜி.மோகன், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளா் கே.பி.சந்தோஷம், நகர எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் மு.உமா் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூா், ஊராட்சி கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com