நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை சிறப்பு முகாம்

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில், நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் அளிக்க சனிக்கிழமை (அக். 17) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.


ராணிப்பேட்டை: வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில், நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் அளிக்க சனிக்கிழமை (அக். 17) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் நுண்ணீா் பாசனத் திட்டமானது, தமிழக அரசால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, கரும்பு பயிா் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீா் பாசன அமைப்புகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விவசாயிகள் உடனடியாக கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களைப் பெற்றிட மாவட்டத்தில் அனைத்து வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (அக். 17) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது பரிசீலிக்கப்பட்டு, வரும் செவ்வாய்க்கிழமை (அக். 20) மீண்டும் அந்தந்த வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் சான்றுகள் வழங்கப்படும்.

மேலும், இந்த முகாமில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பங்கேற்று, நுண்ணீா் பாசனம் அமைப்பதற்கான விண்ணப்பங்களைப் பெற உள்ளனா். இந்த நுண்ணீா் பாசனத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிறப்பு முகாமில் சமூக இடைவெளியுடன் பங்கேற்று, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com