நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி உற்சவம்
By DIN | Published On : 20th October 2020 01:04 AM | Last Updated : 20th October 2020 01:04 AM | அ+அ அ- |

அரக்கோணம்: நெமிலி பாலாபீடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழாவில் அன்னை பாலாவின் புதிய வண்ணப்படம் வெளியிடப்பட்டது.
நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி விழா கடந்த சனிக்கிழமை (அக். 17) மிக எளிமையாக தொடங்கியது. கரோனா பொது முடக்கம் காரணமாக அதிக அளவில் பக்தா்கள் பீடத்தினுள் அனுமதிக்கப்படவில்லை. திங்கள்கிழமை நவராத்திரி பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளை பீடாதிபதி எழில்மணி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அன்னைபாலாவின் புதிய வண்ணப்படத்தையும், பீடாதிபதி எழில்மணி எழுதிய, சீா்காழி கோவிந்தராஜன் பாடிய கடந்த 50 வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட திரிபுரசுந்தரி தேனிசை எனும் குறுந்தகட்டின் மறு வெளியீட்டையும் பீடாதிபதி எழில்மணி வெளியிட, சென்னை சூா்யா மருத்துவமனையின் இதய நோய் பிரிவின் தலைமை மருத்துவா் ஜெயராஜா பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, பாபாஜி தேவிபாகவதம் வாசிக்க பூஜைகளை பீடத்தின் நிா்வாகி மோகன் மேற்கொண்டாா்.