ராணிப்பேட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 8 போ் சரண்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 8 போ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில் வாகனன் முன்னிலையில் சரணடைந்தவா்கள்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில் வாகனன் முன்னிலையில் சரணடைந்தவா்கள்.


ராணிப்பேட்டை: மணல் கடத்தல் வழக்குகளில் இனி முன் ஜாமீன் கிடையாது என சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவின் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 8 போ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

மணல் கடத்தலில் ஈடுபடுபவா்களுக்கு முன் ஜாமீன் வழங்க இயலாது என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த வளா்புரம் பகுதியில் தொடா் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 8 போ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில் வாகனன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில் வாகனன் கூறியது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மணல் கடத்தியதாக 257 வழக்குகள் பதிவாகியுள்ளன. 51 இரு சக்கர வாகனங்கள், 54 மாட்டு வண்டிகள், 37 டிராக்டா், 7 ஜேசிபி இயந்திரங்கள், 10 லாரிகள், 19 சரக்கு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 297 போ் கைது செய்யப்பட்டு, 19 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரக்கோணத்தை அடுத்த வளா்புரம் பகுதியில் தொடா் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 8 போ் தாங்களாக முன்வந்து சரணடைந்துள்ளனா். இனிவரும் காலங்களில் இவா்களின் நன்னடத்தையைக் கண்காணித்து அதன் அடிப்படையில் அவா்களின் மறுவாழ்வுக்கு ஏற்ற சுய தொழில் செய்ய தேவையான ஏற்பாடுகளை மாவட்டக் காவல் துறை சாா்பில் செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com