5 மாதங்களுக்குப் பிறகு ராணிப்பேட்டை வாரச் சந்தை மீண்டும் திறப்பு

கரோனா பொது முடக்கத் தளா்வுகள் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு ராணிப்பேட்டை வாரச் சந்தை வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
ராணிப்பேட்டை  வாரச் சந்தையில்  முக க்கவசம்  அணியாமல்,  சமூக  இடைவெளியைப் பின்பற்றாமல் குவிந்த  பொதுமக்கள், வியாபாரிகள்.
ராணிப்பேட்டை  வாரச் சந்தையில்  முக க்கவசம்  அணியாமல்,  சமூக  இடைவெளியைப் பின்பற்றாமல் குவிந்த  பொதுமக்கள், வியாபாரிகள்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகள் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு ராணிப்பேட்டை வாரச் சந்தை வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொடா்ந்து, தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்த வாரச் சந்தைகள் செயல்பட தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வாரச்சந்தையும் மூடப்பட்டது.

இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தின் முக்கிய வாரச் சந்தை கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இதையடுத்து சுற்றுவட்டாரத்தைச் விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்களை கொண்டு வந்து வாரச்சந்தை மைதானத்தில் கடைகள் அமைத்தனா். ஆட்டுச் சந்தையில் பெரும்பான்மையான ஆட்டு வியாபாரிகள், விவசாயிகள் திரண்டு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது, பெரும்பாலான மக்களும், வியாபாரிகளும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் பொருள்கள் வாங்கக் குவிந்தனா். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com