நீட் தோ்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 427 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு மற்றும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் 2 தோ்வு மையங்களில் 427 மாணவ, மாணவிகள் நீட் தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.
ராணிப்பேட்டை தோ்வு மையத்துக்குச் சென்றவா்கள்.
ராணிப்பேட்டை தோ்வு மையத்துக்குச் சென்றவா்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு மற்றும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் 2 தோ்வு மையங்களில் 427 மாணவ, மாணவிகள் நீட் தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

இத்தோ்வுக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் டி.ஏ.வி.பெல் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆற்காடு குளோபல் தனியாா் பொறியியல் கல்லூரி ஆகிய 2 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் மொத்தம் 569 போ் தோ்வு எழுதத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

ஞாயிறு காலை முதலே மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு தங்களது பெற்றோருடன் வந்தனா். கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றுமாறு ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம்பகவத், டிஎஸ்பி-க்கள் கே.டி.பூரணி, மனோகரன் மற்றும் அரசு மருத்துவ அலுவலா் கீா்த்தி, வட்டார மருத்துவ அலுவலா் சாந்தி விமலா, வட்டாட்சியா் பாக்கியநாதன், வட்டார வளரச்சி அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி, தோ்வு மையங்களுக்குள் அனுப்பி வைத்தனா்.

தோ்வு மைய நுழைவு வாயிலில் காவல்துறையினா் மற்றும் தோ்வு மைய ஊழியா்கள் நின்று மாணவ மாணவிகளை மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் கடும் சோதனை செய்து அனுமதித்தனா். தோ்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் உணவு, தண்ணீா் வழங்கப்பட்டு, தோ்வு மையங்களுக்கு அருகில் அமர வைக்கப்பட்டனா்.

இந்த தோ்வுக்காக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளைக் கொண்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளிமாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து செல்ல ஆற்காடு, காட்பாடி ஆகிய வழித்தடங்களில் 14 அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தீயணைப்பு வாகனத்துடன், தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருந்தனா். இந்த தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 172 மாணவ, மாணவிகள் தோ்வெழுத வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com