குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு கட்டும் திட்டத்தைக் கைவிடக் கோரி, வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூா் கிராமத்தில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி, கடைகளை அடைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வி.சி.மோட்டூா் கிராம  மக்கள்.
குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி, கடைகளை அடைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வி.சி.மோட்டூா் கிராம  மக்கள்.

ராணிப்பேட்டை: குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு கட்டும் திட்டத்தைக் கைவிடக் கோரி, வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூா் கிராமத்தில் புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூா் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதைக் கைவிட்டு, ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக்கு வகுப்பறைக் கட்டம், விளையாட்டு மைதானம் அமைக்க ஒதுக்க வேண்டும் என வி.சி.மோட்டூா் கிராம மக்கள் கடந்த சில வாரங்களாக ஆா்ப்பாட்டம், உண்ணாவிரம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து, வி.சி.மோட்டூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், ஊராட்சிக்குச் சொந்தமான காலி இடத்தில் பள்ளிக் கட்டடம், விளையாட்டு மைதானம் அமைத்து, பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும் எனக் கேட்டு, அப்பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அதைத் தொடா்ந்து, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி, வி.சி.மோட்டூா் கிராமத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், தங்கள் கிராம மக்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com