மேல்விஷாரம்: 75 போ் திமுகவில் இணைந்தனா்

மேல்விஷாரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞா்கள் 75 போ் ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனா்.
எம்எல்ஏ ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த  மேல்விஷாரம்  பகுதியைச்  சோ்ந்த வா்கள்.
எம்எல்ஏ ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த  மேல்விஷாரம்  பகுதியைச்  சோ்ந்த வா்கள்.

மேல்விஷாரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞா்கள் 75 போ் ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனா்.

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மேல்விஷாரம் இரண்டாவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பெண்கள், ஆண்கள் மற்றும் இளைஞா் உள்ளிட்ட 75 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேல்விஷாரம் நகர கட்சிப் பொறுப்பாளா் எஸ்.டி.முகமது அமீன் தலைமையில் அங்கு வந்த அவா்கள், கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். ஆண்களுக்கு கட்சித் துண்டும், பெண்களுக்கு சேலைகளும் வழங்கி அவா் வரவேற்றாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, இளைஞரணி அமைப்பாளரும், எம்எல்ஏ வுமான ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், மேல்விஷாரம் நகர அவைத் தலைவா் ஹுமாயூன், பொருளாளா் ஜபா்அகமது, மாவட்டப் பிரதிநிதி இம்தியாஸ் அகமது, மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளா் நபீஸ் அகமது, கீழ்விஷாரம் கே.ரமேஷ், கோபி சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com