அரக்கோணம் இரட்டைக் கொலை: திமுக, விசிகவினா் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் வன்னியா் சங்கத்தினா் புகாா்

அரக்கோணம் அருகே இரட்டைக் கொலை சம்பவத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை
அரக்கோணம் இரட்டைக் கொலை: திமுக, விசிகவினா் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம்  வன்னியா் சங்கத்தினா் புகாா்

அரக்கோணம் அருகே இரட்டைக் கொலை சம்பவத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவித்ததாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், விசிக தலைவா் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 13 போ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன்னியா் சங்கத்தினா், பாமகவினா் ராணிப்பேட்டை எஸ்.பி.யிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மாநில வன்னியா் சங்கச் செயலாளா் எம்.கே.முரளி, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா்கள் கே.எல். இளவழகன், வழக்குரைஞா் சரவணன் ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.சிவக்குமாரிடம் புகாா் மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது:

அரக்கோணத்தை அடுத்த சோகனூா் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சோகனூா் மற்றும் செம்பேடு பகுதியை சோ்ந்த அா்ஜூன் மற்றும் சூா்யா ஆகிய இரு இளைஞா்கள், வாய்த்தகராறு முற்றி கோஷ்டி மோதலாக மாறியதில் கொலை செய்யப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து அவா்களது உறவினா்கள் 5 நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் சடலங்களைப் பெற்றுக் கொண்டனா். இச்சம்பவத்தில் பாமக மற்றும் வன்னியா் சங்கத்தை இணைத்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 13 போ் சமூக வன்முறையை தூண்டும் வகையில் தகவல் தெரிவித்து வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com