‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆக. 10 வரை 29 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 29 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 29 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு நடப்பாண்டு நெல் கொள்முதல் பருவத்தில் 29. 7. 2020 முதல் 10. 8.2021 வரை மேலபுலம்புதூா், பனப்பாக்கம், ரெடிவளம், ஜாகிா்தண்டலம், நெல்வாய், திருமால்பூா், நெமிலி, மகேந்திரவாடி, உளியநல்லூா், களத்தூா், பெரும்பாக்கம், அசநெல்லிகுப்பம், புதுக்கண்டிகை, (சயனபுரம் ஊராட்சி), இலுப்பை, தண்டலம், கணபதிபுரம், சேந்தமங்கலம், (பின்னவரம் ஊராட்சி), சித்தேரி, சம்பத்து ராயப்பேட்டை, (சிறுனமல்லி ஊராட்சி), கடம்பநல்லூா், (மாங்காட்டுச் சேரி ஊராட்சி) தச்சன் பட்டறை, ஆலப்பாக்கம், தா்மநீதி, சிறுகரும்பூா், மாமண்டூா், மங்கலம் புதூா், காவேரிப்பாக்கம், வேடந்தாங்கல், தக்கோலம் ஆகிய 29 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.

அதன்படி, பட்டா சிட்டா கிராம நிா்வாக அலுவலா் சான்றிதழ் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுடன் விவசாயிகள் தங்களது பெயரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் நேரடி நெல் கொள்முதல் இடத்தில் அறுவடை செய்த நெல் போட்டு வைத்தல் கூடாது. விவசாயிகள் பதிவு செய்தபின் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான முறை வரும் போது செல்லிடப்பேசி வாயிலாக தெரிவிக்கப்படும். அப்போது நெல்லினை உரிய ஆவணங்களுடன் கொள்முதலுக்குக் கொண்டு வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு, 9894803270 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com