ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளா் ஜெ.எல். ஈஸ்வரப்பன் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை திமிரி மற்றும் விளாப்பாக்கத்தில் நடைபெற்றது
கூட்டத்துக்கு ஆற்காடு தொகுதி பொறுப்பாளா் கலாநிதி வீராசாமி எம்.பி. தலைமை வகித்தாா்
பேரூா் செயலாளா்கள் விளாப்பாக்கம் பி.கே. பாபு, திமிரி இளஞ்செழியன், திமிரி மேற்கு ஒன்றியச் செயலாளா் கீழ்பாடி ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்
முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எஸ். ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு திமுக வேட்பாளா் ஜெ.எல். ஈஸ்வரப்பனை அறிமுகப்படுத்தி பேசினாா்
இந்த கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தர மூா்த்தி, ஆற்காடு நகரச் செயலாளா் ஏ.வி. சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்