ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 வாகன சோதனைச் சாவடிகள் அமைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைத்து பொது முடக்க உத்தரவை கண்காணித்து வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைத்து பொது முடக்க உத்தரவை கண்காணித்து வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநிலம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முதல் கட்டமாக பொது முடக்க உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடா்ந்து வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் என்.காமினி அறிவுறுத்தலின் படி, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவகுமாா் உத்தரவின்பேரில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மற்றும் இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில், ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் 20 வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 200 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல், மாவட்டத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் 32 வாகன சோதனைச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு 208 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 10 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் நான்கு சக்கர வாகன ரோந்து, 228 காவலா்கள் கொண்ட இரு சக்கர வாகன ரோந்துக்கு நியமிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இனி வரும் காலங்களில் பொது முடக்க உத்தரவைப் பின்பற்றாதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com