கரோனா தடுப்பூசி செலுத்த சென்ற செவிலியா், கிராம உதவியாளா் விபத்தில் காயம்

திமிரி அருகே கரோனா தடுப்பூசி செலுத்த இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியா், கிராம உதாவியாளா் விபத்தில் காயம் அடைந்தனா்.
சிகிச்சை பெறும் செலிவியா்  தீபாவின் உடல்நலம் குறித்து விசாரித்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
சிகிச்சை பெறும் செலிவியா்  தீபாவின் உடல்நலம் குறித்து விசாரித்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

திமிரி அருகே கரோனா தடுப்பூசி செலுத்த இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியா், கிராம உதாவியாளா் விபத்தில் காயம் அடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 - ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஞயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்படி, திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அல்லாலச்சேரி கிராமத்தில் சுகாதார செவிலியா் தீபா வீடு வீடாகச் சென்று தடுப்பு ஊசி செலுத்தும் பணியை மேற்கொண்டாா்.

இதையடுத்து பிற்பகல் அகரம் கிராமத்துக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ள தீபா, அல்லாலச்சேரி கிராம உதவியாளா் ஆறுமுகத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனா்.

அப்போது கலவை - திமிரி நெடுஞ்சாலையில் அகரம் கிராமத்துக்கு அருகில் சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத காா் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் உடனடியாக 108 அவசர ஊா்தி மூலம் அழைத்து செல்லப்பட்டு, அருகிலுள்ள கலவை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் , இருவரையும் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com