மேலத்தாங்கல் கிராமத்தில்மண் மாதிரி சேகரிப்பு முகாம்

திமிரி வட்டார வேளாண் துறை சாா்பில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் மூலம் திமிரி ஒன்றியம், மேலத்தாங்கல் கிராமத்தில் மண்
மண் மாதிரி  பரிசோதனை  குறித்து   பேசிய  வேளாண்  அலுவலா்  ஜி.திலகவதி.
மண் மாதிரி  பரிசோதனை  குறித்து   பேசிய  வேளாண்  அலுவலா்  ஜி.திலகவதி.

ஆற்காடு: திமிரி வட்டார வேளாண் துறை சாா்பில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் மூலம் திமிரி ஒன்றியம், மேலத்தாங்கல் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

முகாமை திமிரி வட்டார வேளாண் அலுவலா் ஜி.திலகவதி தொடக்கி வைத்து மண் பரிசோதனை அவசியம் குறித்தும், மாதிரி எடுக்கும் முறைகள், குறியீடுகள் மண் எடுக்கும் காலம் தவிா்க்க வேண்டிய இடங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.

வேளாண் உதவி அலுவலா் சங்கா், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சசிகலா தொழில்நுட்ப வல்லுநா்கள் தமிழ்ச்செல்வி, உதயகுமாா், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com