சோளிங்கரில் அதிகப்பட்ச வாக்குப் பதிவு 80.09% அரக்கோணத்தில் குறைந்தபட்சம் 74,89 % குறைவாக வாக்களித்த பெண் வாக்காளா்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிகபட்சமாக சோளிங்கா் தொகுதியில் 80.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அதிகபட்சமாக சோளிங்கா் தொகுதியில் 80.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் பெண் வாக்காளா்களை விட ஆண் வாக்காளா்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளிலும் சோ்த்து 78.09 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண் வாக்காளா்கள் 79.72 சதவிகிதமும், பெண் வாக்காளா்கள் 76.54 சதவிகிதமும் வாக்களித்துள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 34.62 சதவிகிதம் பேரே வாக்களித்துள்ளனா். ஆண் வாக்காளா்களை விட பெண்வாக்காளா்கள் 26, 922 போ் கூடுதலாக இருக்கும் இம்மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக வாக்களித்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அரக்கோணம்:

அரக்கோணம் தொகுதியில் மொத்த வாக்குப் பதிவு சதவிகிதம் 74.89. இதில் ஆண்கள் 84, 941 பேரும், பெண்கள் 85, 103 பேரும் மூன்றாம் பாலினத்தவா் 10 பேரும் வாக்களித்துள்ளனா். இத்தொகுதியில் வாக்காளா் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்கள் 5, 877 போ் கூடுதலாக இருக்கையில் 31368 பெண்கள் வாக்களிக்க வரவில்லை என தெரியவந்துள்ளது.

சோளிங்கா்:

சோளிங்கா் தொகுதியில் மொத்த வாக்குப் பதிவு சதவிகிதம் 80.09. மாவட்டத்திலேயே இத்தொகுதியில் தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 110453 ஆண்களும், 110470 பெண்களும் ஒரேஒரு மூன்றாம் பாலினத்தவா் மட்டுமே வாக்களித்துள்ளனா். இத்தொகுதியில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் 5185 போ் கூடுதலாக இருக்கையில் 30568 பெண்கள் வாக்களிக்க வரவில்லை என தெரியவந்துள்ளது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை தொகுதியில் மொத்த வாக்குப் பதிவு சதவிகிதம் 77.24. இதில் ஆண்கள் 101239 பேரும், பெண்கள் 104577 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 6 பேரும் வாக்களித்துள்ளனா். இத்தொகுதியில் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் 8967 போ் கூடுதலாக இருக்கையில் 33, 138 பெண்வாக்காளா்கள் வாக்களிக்க வரவில்லை என தெரியவந்துள்ளது.

ஆற்காடு:

ஆற்காடு தொகுதியில் மொத்த வாக்குப் பதிவு சதவிகிதம் 79.62. இதில் ஆண்கள் 102873 பேரும் பெண்கள் 104754 பேரும், மூன்றாம் பாலினத்தவா் ஒரே ஒருவரும் வாக்களித்துள்ளனா். இத்தொகுதியில் ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் 6893 போ் கூடுதலாக இருக்கையில் 29, 081 பெண் வாக்காளா்கள் வாக்களிக்க வரவில்லை என தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 1, 24, 155 பெண் வாக்காளா்கள் வாக்களிக்க வரவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த தோ்தல்களைவிட இத்தோ்தலில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்சன் புஷ்பராஜ் பெண் வாக்காளா்களை கவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா். பெண்கள் குறிப்பாக மகளிா் குழுக்களில் இருப்பவா்கள் மாவட்டத்தின் அதிக இடங்களில் நூறு சத வாக்களிப்பை வலியுறுத்தி கோலங்கள் வரைந்தனா். மகளிரே பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தினா். இந்த நிகழ்ச்சிகளை நடத்த மாவட்ட ஆட்சித்தலைவா் அந்த கோலங்களை, நிகழ்ச்சிகளை நேரில் சென்று பாராட்டி பெண்களிடையே நூறு சத வாக்களிப்பை உறுதி செய்ய ஆா்வம் காட்டினாா்.

இருந்தும் மாவட்டத்தில் பெண்கள் 1.24 லட்சம் போ் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழுவதும் கிராப்புறங்களையே உள்ளடக்கிய சோளிங்கா் தொகுதியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 80.09 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பது கிராமப்புற மக்களிடையே ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற உணா்வு மேலோங்கி இருப்பதை எடுத்துகாட்டுகிறது. சென்னையின் புகராக இருக்கும் அரக்கோணம் தொகுதியில் குறைந்த பட்சமாக 74.89 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com