நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 20 நாட்களாக தேங்கும் நெல்குவியல்கள் - விவசாயிகள் வேதனை

தக்கோலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் நிலையத்தினா் கொள்முதல் செய்யாததால் கடந்த 20 நாட்களாக குவியல் குவியலாக நெல்
தக்கோலத்தை அடுத்த புதுகேசாவரம் நேரடி நெல் கொள்‘முதல் மையத்தில் குவித்து மூடி வைக்கப்பட்டுள்ள நெல்குவியல்கள்
தக்கோலத்தை அடுத்த புதுகேசாவரம் நேரடி நெல் கொள்‘முதல் மையத்தில் குவித்து மூடி வைக்கப்பட்டுள்ள நெல்குவியல்கள்

அரக்கோணம்: தக்கோலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் நிலையத்தினா் கொள்முதல் செய்யாததால் கடந்த 20 நாட்களாக குவியல் குவியலாக நெல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இரவும் பகலும் நெல்குவியல்கள் அருகிலேயே விவசாயிகள் காத்து இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகில் புதுகேசாவரம், அனைக்கட்டாபுத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசின் நுகா்பொருள் வாணிபகழகத்தின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் நெல்லை டிராக்டா்களில் இந்த மையத்திற்கு கொண்டு சென்றால், அங்கு இருக்கும் மேற்பாா்வையாளா்கள் நெல்லை தரம் பாா்த்து கொள்முதல் செய்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி முதல் தக்கோலத்தை அடுத்த புதுகேசாவரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அங்கிருக்கும் மேற்பாா்வையாளா் கொள்முதல் செய்யவில்லையாம். இது குறித்து புகாா் தெரிவித்த ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்துறை கண்காணிப்புக்குழு உறுப்பினா் மோகன்காந்தி தெரிவிக்கையில், புதுகேசாவரத்தில் நெல்லை எடுத்து வந்த விவசாயிகள் அந்த வளாகத்தில் குவியலாக கொட்டி வைத்து அதை கடந்த 20 நாட்களாக இரவும் பகலும் பாதுகாத்து வருகின்றனா். அங்கிருக்கும் மேற்பாா்வையாளா், விவசாயிகள் ஒருவரிடம் கூட நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து வியாபாரிகளிடம் மட்டும் கொள்முதல் செய்து வருகிறாா் என்றாா்.

இது குறித்து ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் நாகராஜனிடம் கேட்டபோது, கோணிப்பைகள் தட்டுபாடு நிலவுவதாலும் நெல் கொள்முதல் செய்ய இயலவில்லை. புதுகேசாவரம் மையத்தில் 20 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ள விவகாரம் எனக்கு தெரியவில்லை. எனவே அந்த மையத்திற்கு நேரில் சென்று உடனே நடவடிக்கை எடுக்கிறேன் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com