அண்ணன் கொலை: தம்பி தலைமறைவு
By DIN | Published On : 31st August 2021 08:21 AM | Last Updated : 31st August 2021 08:21 AM | அ+அ அ- |

ஆற்காடு அருகே கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆற்காட்டை அடுத்த காவனூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் கட்டடத் தொழிலாளி தேவநாராயணன்(41). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவா் ஞாயிற்றுக்கிழமை மது குடித்துவிட்டு, தாய் லட்சுமியுடன் தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்து, தேவநாராயணனை அவரது தம்பி கணபதி (25) தட்டி கேட்டாராம். இதில் ஏற்பட்ட தகராறில், தேவநாராயணன் கத்தியால் குத்தப்பட்டாா்.
இதில், பலத்த காயம் அடைந்த தேவநாராயணன், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, கணபதியை தேடி வருகின்றனா்.