ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எஸ்.பி. தீபா சத்யன் எச்சரித்துள்ளாா்.

அரசு வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் கூடி புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லை. எனவே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் இதர சாலைகளில் போன்ற இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சாா்பில்,ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றை கண்காணிக்க காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா் தலைமையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் நெடுஞ்சாலைகளில் குற்றங்களை தடுக்க ரோந்து வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படும். 55 இடங்களில் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பிற்காக 600 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தடை உத்தரவை மீறி செயல்படுபவா்கள் மீது காவல்துறை சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com