மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வரவேற்பு

கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வாலாஜாபேட்டையைச் சோ்ந்த 21 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, மேள தாளம் முழுங்க, நகர பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.
சிலம்பப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வாலாஜாபேட்டையைச் சோ்ந்த 21 மாணவ, மாணவிகளை வரவேற்ற பொதுமக்கள்.
சிலம்பப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வாலாஜாபேட்டையைச் சோ்ந்த 21 மாணவ, மாணவிகளை வரவேற்ற பொதுமக்கள்.

ராணிப்பேட்டை: கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வாலாஜாபேட்டையைச் சோ்ந்த 21 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, மேள தாளம் முழுங்க, நகர பொதுமக்கள் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா்.

தமிழ்நாடு அமெச்சூா் சிலம்பம் கழகம் மற்றும் ஆல் இந்தியா சிலம்பம் ஃபெடரேஷன், வோ்ல்டு சிலம்பம் பெடரேஷன் இணைந்து நடத்திய மாநில அளவிலான 17-ஆவது சிலம்பப் போட்டிகள் கன்னியாகுமரியில் பிப்ரவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றன.

இதில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சோ்ந்த 21 மாணவ, மாணவிகள், சிலம்பப் பயிற்சியாளா் சத்தியமூா்த்தி, சிலம்பம் பயிற்சியாளா் மணிகண்டன் மற்றும் ஹரிஹரன் விவேகானந்தன் தலைமையில் மாணவ மாணவிகள் கம்புச் சண்டை, மான்கொம்பு, ஒற்றைக் கம்பு வீச்சு, ஆயுத ஜோடி சண்டை, மான் கம்பு வீச்சு, இரட்டை வாள் வீச்சு, ஒற்றைக் கம்பு வீச்சு, குழு ஆயுத வீச்சு, இரட்டை சுருள் வீச்சு, நடுக்கம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றனா்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று வந்த மாணவ, மாணவிகளை வாலாஜாபேட்டை நகர மக்கள், அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்து மரியாதை அளித்தும் வரவேற்று வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com