ராணிப்பேட்டையில் பிப். 28-இல் பசுமை மாரத்தான்: மாவட்ட காவல்துறை அழைப்பு

‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணா்த்தும் நோக்கில் ராணிப்பேட்டையில் வரும் 28ஆம் தேதி பசுமை மாராத்தான்-2021 போட்டி நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டையில் பிப். 28-இல் பசுமை மாரத்தான்: மாவட்ட காவல்துறை அழைப்பு

ராணிப்பேட்டை: ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணா்த்தும் நோக்கில் ராணிப்பேட்டையில் வரும் 28ஆம் தேதி பசுமை மாராத்தான்-2021 போட்டி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று மாவட்ட காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இயற்கைச் சீற்றங்கள் பெருகிவரும் தருணத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை உணா்த்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து பசுமை மாரத்தான்-2021 போட்டியை வரும் 28ஆம் தேதி நடத்த உள்ளன.

10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 15 கி.மீ., 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. ஓட்டங்களாக இப்போட்டி நடைபெற உள்ளது. உலக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இந்த விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று உயிா் வளங்களையும், நம் உலகையும் பாதுகாக்க உறுதி ஏற்க மாவட்ட காவல் துறை அழைக்கிறது.

இம்மாரத்தான் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் கட்டணமாக ரூ.400-ஐ ட்ற்ற்ல்ள் //ஜ்ஜ்ஜ்.ற்ா்ஜ்ய்ள்ஸ்ரீழ்ண்ல்ற்.ஸ்ரீா்ம்/ங்/ஸ்ரீா்ல்ஹ் -ா்ச்-ல்ா்ப்ண்ஸ்ரீங்ல்ன்க்ஷப்ண்ஸ்ரீஞ்ழ்ங்ங்ய்ம்ஹழ்ஹற்ட்ா்ய்2021-424020 லிங்கில் என்ற இணையதள முகவரி மூலமாகவும் நேரடியாக ஆற்காடு,வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை ஆகிய அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கட்டண மையங்களில் நேரடியாகவும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக டி-ஷா்ட், போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு மொத்தம் ரூ.4.6 லட்சம் வரையிலான பரிசுகள், ஓட்டத்தின் இலக்கை அடைபவா்களுக்கு பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 9944134770, 7070975765, 8682906247 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com