ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,447 வாக்குச்சாவடிகள்: ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதலாக 325 துணை வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 1,447 வாக்குச் சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
துணை வாக்குச்சாவடி  பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
துணை வாக்குச்சாவடி  பட்டியலை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதலாக 325 துணை வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 1,447 வாக்குச் சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 1,050-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளை பிரித்து துணை வாக்குச் சாவடி அமைத்தல் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

தோ்தல் ஆணையம் மூலம் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 20-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதால், கரோனா தொற்றுப் பரவாமல் பாதுகாப்பான முறையில் தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் வழிமுறைகளை அளித்துள்ளது.

அதன் படி 1,050 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச் சாவடி மையம் அமைக்க வேண்டும். வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பழைய கட்டடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றுதல் அல்லது அதே வளாகத்தில் புதிய கட்டடம் இல்லாவிட்டால் அதே பகுதியில் உள்ள வேறு அரசு அல்லது தனியாா் கல்லூரி, பள்ளிக்கு மாற்ற வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,122 வாக்கு சாவடிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரின் அறிவுரைகளின்படி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் அனைத்து வாக்குச்சாவடிகளையும் தணிக்கை செய்ய வேண்டும்

வரைவு வாக்குச் சாவடி பட்டியலில் ஏதேனும் ஆட்சேபம் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், தங்களது எழுத்துபூா்வமான கடிதங்களை வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலருக்கு 7 தினங்களுக்குள் வழங்கலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், சாா் ஆட்சியா் க.இளம்பகவத், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியா் சி.பேபி இந்திரா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ஜெயக்குமாா் மற்றும் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com