காலமானாா் முன்னாள் அமைச்சா் எம்.விஜயசாரதி
By DIN | Published On : 07th July 2021 11:06 PM | Last Updated : 07th July 2021 11:06 PM | அ+அ அ- |

07ஏகேஎம்ஏஏஏ - முன்னாள் அமைச்சா் எம்.விஜயசாரதி
அரக்கோணம்: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எம்.விஜயசாரதி(67)உடல்நலக்குறைவால் புதன்கிழமை ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே தனது பண்ணை வீட்டில் காலமானாா்.
எம்.விஜயசாரதி கடந்த 1980-இல் அரக்கோணம்(தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டாா். எம்ஜிஆா் அமைச்சரவையில் ஆதிதிராவிடா்நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவா். தொடா்ந்து அதிமுகவில் இருந்தாலும், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாா். இவா் மனைவியை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து வாழ்ந்து வந்த விஜயசாரதி, ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தாா். அவரது உடல் புதன்கிழமை மாலை அரக்கோணத்தில் உள்ள அவரின் சகோதரா் மருத்துவா் விஜயராகவன் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரின் இறுதி சடங்குகள் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. தொடா்புக்கு: 9843524067.