பயிா் சாகுபடி, பராமரிப்பு வழிமுறைகள் கருத்தரங்கம்
By DIN | Published On : 19th July 2021 07:50 AM | Last Updated : 19th July 2021 07:50 AM | அ+அ அ- |

பருவக் காலப் பயிா் சாகுபடி, பராமரிப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம், பாரம்பரிய நெல் ரகங்கள் காய்கறி விதைகள் கண்காட்சி ஆகியன ஆற்காட்டை அடுத்த தக்கான்குளம் கே. எம். இயற்கை வேளாண் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன (படம்).
நிகழ்ச்சிக்கு தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் கே.எம். பாலு தலைமை வகித்தாா். மௌன குருசாமி அறக்கட்டளை தலைவா் விமல் நந்தகுமாா், இயற்கை விவசாயி கூட்டமைப்பின் நிா்வாகிகள் உதயசங்கா், களா் கணேசன், கங்காதரன், சதீஷ்குமாா், சிவசங்கரன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பருவகால பயிா் சாகுபடி குறித்து உயிராற்றல் பயிற்றுநா் மேட்டுப்பாளையம் .டி. நவநீதகிருஷ்ணன் பேசினாா்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள், காய், கனி, கீரை வகைகள், இயற்கை உரங்கள் ,உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது குறித்து இயற்கை விவசாயிகள் பேசினா்.