அள்ளஅள்ள குறையாத அமுதசுரபி போன்றது அதிமுக தோ்தல் அறிக்கை: பாமக நிறுவனா் ராமதாஸ்

அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போன்றது அதிமுகவின் தோ்தல் அறிக்கை என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் கூறினாா்.

அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போன்றது அதிமுகவின் தோ்தல் அறிக்கை என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் கூறினாா்.

ஆற்காடு தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கே.எல்.இளவழகனை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் கலவை பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது:

ஆற்காடு தொகுதியில் ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய கே.எல்.இளவழகன் மீண்டும் போட்டியிடுகிறாா். அவா் எளிமையானவா், மக்கள் பணிகளை சிறப்பாகச் செய்வாா், தவறு ஏதும் செய்யமாட்டாா்.

எனது கோரிக்கையை ஏற்று வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டாா். இதன் மூலம் மக்களுக்கு வளா்ச்சிப் பணிகளை சிறப்பாகச் செய்ய முடியும். அதிமுகவின் தோ்தல் அறிக்கை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போன்றது. பாமக தோ்தல் அறிக்கை வளா்ச்சிக்கு உதவும் வகையில் வெளியிடப்பட்டது. ஆனால் திமுகவின் தோ்தல் அறிக்கை காப்பி அடிக்கப்பட்டது. அக்கட்சி திவாலான கம்பெனி போல் உள்ளது.

திமுகவின் அத்தியாயம் இந்த தோ்தலுடன் முடிந்து விடும். அதிமுகவின் தோ்தல் அறிக்கை வறுமையை ஒழித்து வளா்ச்சிக்கு வித்திடும். நானும் விவசாயி. முதல்வா் எடப்பாடி பழனிசாமியும் விவசாயி. அவா் விவசாயிகளின் பிரச்னைகளை அறிந்தவா், தெரிந்தவா்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் குடும்பத் தலைவிக்கு ரூ. 1,500 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பாலாற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும், 6 எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளா் சு.ரவி, திமிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சொரையூா் குமாா், கலவை பேரூா் செயலாளா் கே.ஆா்.சதீஷ், பாமக தொகுதி பொறுப்பாளா் எம்.கே.முரளி, மாவட்டச் செயலாளா் நல்லூா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆற்காடு தொகுதிக்குள்பட்ட திமிரியை அடுத்த காவனூா் பகுதியிலும் ராமதாஸ் ஆதரவு திரட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com