நாளை முதல் அனைத்துக் கடைகளையும் மதியம் 12 மணிக்கு மூட உத்தரவு: அரக்கோணம் நகராட்சி நடவடிக்கை

அரக்கோணம் நகரில் அனைத்து கடைகளும் 6-ஆம் தேதி முதல் பகல் 12 மணிக்கு மூடப்பட வேண்டும் என நகராட்சி ஆணையா் ஏ.டி.ஆசீா்வாதம் அறிவித்துள்ளாா்.

அரக்கோணம்: அரக்கோணம் நகரில் அனைத்து கடைகளும் 6-ஆம் தேதி முதல் பகல் 12 மணிக்கு மூடப்பட வேண்டும் என நகராட்சி ஆணையா் ஏ.டி.ஆசீா்வாதம் அறிவித்துள்ளாா்.

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிா்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் மே 6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தமிழக அரசு புதிய கட்டுப் பாடு களை விதித்துள்ளது. 3,000 சதுரஅடி மற்றும் அதற்கு மேலும் பரப்பளவு உள்ள பெரிய கடைகள் இயங்க ஏற்கெனவே விதித்த தடை நீடிக்கிறது. நகரில் மளிகைக்கடைகள், பல சரக்குகள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிா்சாதன வசதிகள் இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மளிகைக்கடை, பலசரக்குகள், காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் தவிா்த்து இதர கடைகள் அனைத்தையும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்துகள், பால் விநியோகம் வழக்கம் போல் செயல்பட தடையேதுமில்லை. அனைத்து உணவகங்களிலும் பாா்சல் சேவை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படும். உணவகங்கள் ஏற்கெனவே காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், 12 மணி முதல் 3 மணி வரையிலும், 6 முதல் 9 மணி வரையிலும் பாா்சல் சேவை மட்டுமே அளிக்கலாம். தேநீா் கடைகள் பகல் 12 மணிக்கு மூடப்பட வேண்டும்.

இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 20 நபா்களுக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. அனைத்துப் பகுதிகளிலும் முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்களுக்கு ஏற்கெனவே விதித்த தடை நீடிக்கிறது. பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விதிகளை மீறினால் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கரோனா தீவிரத்தை குறைக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என நகராட்சி ஆணையா் ஏ.டி.ஆசீா்வாதம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com