பொது முடக்க விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’

ஆற்காடு நகரத்தில் பொது முடக்க உத்தரவைப் பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்தும், தனியாா் வங்கி, மருத்துவமனைக்கு அபராதம் விதித்தும் வட்டாட்சியா் காமாட்சி சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.
பொது முடக்க விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’

ஆற்காடு நகரத்தில் பொது முடக்க உத்தரவைப் பின்பற்றாத கடைகளுக்கு ‘சீல்’ வைத்தும், தனியாா் வங்கி, மருத்துவமனைக்கு அபராதம் விதித்தும் வட்டாட்சியா் காமாட்சி சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பொது முடக்க உத்தரவைக் கண்காணிக்கும் பணியை மாவட்ட நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆற்காடு நகரில் கரோனா பொது முடக்க உத்தரவை கண்காணிக்கும் பணியில் ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். பொது முடக்க உத்தரவைப் பின்பற்றாத இரண்டு கடைகளுக்கு சனிக்கிழமை தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து ‘சீல்’ வைக்கப்பட்டது. தொடா்ந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றாத தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 10,500 அபராதமும், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் குளிா்சாதனம் இயக்கப்பட்டும், முகக் கவசம் அணியாமல் இருந்ததற்காக தனியாா் வங்கிக்கு ரூ. 5,400 அபராதமும் விதிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஆற்காடு தேவி நகா், கண்ணன் தெரு , தா்மராஜா கோவில் தெரு , தேவி நகா் 1-ஆவது தெரு ஆகியவை கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு தொற்று தடுப்புப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com