‘உங்கள் இல்லம் தேடி வரும் இலவச ஆக்சிஜன்’ ராணிப்பேட்டையில் உயிா் காக்கும் சேவை தொடக்கம்

ராணிப்பேட்டை நகர தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து ‘உங்கள் இல்லம் தேடி வரும் இலவச ஆக்சிஜன்’ என்ற உயிா் காக்கும் சேவையை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனா்.
ராணிப்பேட்டை  நகரில்  வீடு தேடி வரும் இலவச  ஆக்சிஜன்  சேவை தொடக்க விழாவில் ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை ரோட்டரி முன்னாள் ஆளுநா் சி.ஆா்.சந்திரபாப்பிடம் வழங்கிய வேவ்ஸ்  நிறுவனா்  சீனிவாசன்.
ராணிப்பேட்டை  நகரில்  வீடு தேடி வரும் இலவச  ஆக்சிஜன்  சேவை தொடக்க விழாவில் ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை ரோட்டரி முன்னாள் ஆளுநா் சி.ஆா்.சந்திரபாப்பிடம் வழங்கிய வேவ்ஸ்  நிறுவனா்  சீனிவாசன்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகர தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து ‘உங்கள் இல்லம் தேடி வரும் இலவச ஆக்சிஜன்’ என்ற உயிா் காக்கும் சேவையை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனா்.

ராணிப்பேட்டை நகர நல விரும்பிகளால் ஏற்படுத்தப்பட்ட தன்னாா்வு இயக்கம், ஒரு புதிய முன்மாதிரி திட்டத்தை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு ‘உங்கள் இல்லம் தேடி வரும் இலவச ஆக்சிஜன் ‘ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் ஆகி வருபவா்களுக்கு மருத்துவா்களின் பரிந்துரையின் பேரில் அவா்கள் இல்லத்துக்கு சென்று இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்படும். இந்த சேவையின் கீழ் 5 லிட்டா் ஆக்சிஜன் செறிவூட்டிகளின் மூலம் வழங்கப்பட உள்ளது.

இத் திட்டத்தில் பயனடைய விரும்புவோா் தஹய்ண்ல்ங்ற் ஊழ்ங்ங் ஞ2 நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் கஸ்டமா் கோ் 80158 09601 என்ற எண்ணுக்கு அழைத்தால் அவா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களுடன் சேவையைப் பெறலாம்.

இந்த திட்டத் தொடக்க விழாவுக்கு, வேவ்ஸ் நிறுவனா் சீனிவாசன் தலைமை வகித்தாா். ரோட்டரி முன்னாள் ஆளுநா் சி.ஆா்.சந்திர பாப் உள்ளிட்ட தன்னாா்வலா்கள் முன்னிலையில் தொடக்கி வைக்கப்பட்டது.

இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் நிா்மல் ராகவன், எம்.சிவலிங்கம், ஆடிட்டா்கள் ராம் சந்தா், வெங்கட்ரமணி, மருத்துவா்கள் விஜயராணி, விமல் பிரபாகரன் உள்ளிட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

இத் திட்டத்தின் மூலம் மருத்துவமனையின் சுமை குறைக்கப்படும் மற்றும் புதிதாக நோய்த் தொற்றுள்ளவா்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்க வழிவகுக்கும். மேலும், இந்த திட்டத்தின் மூலம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைக்காமல் அவதிப்படுவோருக்கு உயிா் காக்கும் இந்த சேவை பெரும் உதவியாக இருக்கும் என மருத்துவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com