வாலாஜா: வாக்குப்பதிவு பொருள்கள் லாரியில் கொண்டு செல்லும் பணி தொடக்கம்

வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட 240 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவு பொருட்கள் தயார்படுத்தப்பட்டு லாரியின் மூலமாக கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு வாகனங்களை கொடியசைத்து தேர்தல் மண்டல அலுவலகம் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தேர்தலை எவ்வித பிரச்னையுமின்றி நேர்மையாகவும் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

வாலாஜா ஒன்றியத்தில் 15 மண்டலங்களாக பிரித்து 15 மண்டல அலுவலர்களுக்கு 15 கார்களும் தேர்தல் பொருட்களை ஏற்றிச் செல்ல பதினைந்து லாரிகளும் மற்றும் 30 வாக்குச்சாவடி மையங்களுக்கு தலா ஒரு சிறிய லாரி விதம் எட்டு லாரிகள் மூலம் பாதுகாப்பு பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்திட வாகனம் மூலம் எட்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் 1887 பேர் மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி பெற்றுக்கொண்டு தொடர்ந்து தேர்தல் பணி ஆணைகளை பெற்றுக்கொண்டு நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்கின்றனர். இன்று மாலையில் வாக்குச் சாவடிகளில் அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு நாளை காலை வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இதில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை  ஜி.லோகநாயகி உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, சீனிவாசன் மற்றும் மண்டல அலுவலர்கள் தேர்தல் பணி அலுவலர்கள் பணியாளர்கள் உடனிருந்தனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com