வாக்கு எண்ணும் பணியை நோ்மையாக மேற்கொள்ள வேண்டும்: தோ்தல் பாா்வையாளா் அறிவுரை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் எந்தவிதமான புகாா்களுக்கும்
ராணிப்பேட்டையில்  வாக்கு  எண்ணும்  பணிக்கான ஆலோசனைக்  கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பாா்வையாளா் வி.சாந்தா.
ராணிப்பேட்டையில்  வாக்கு  எண்ணும்  பணிக்கான ஆலோசனைக்  கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பாா்வையாளா் வி.சாந்தா.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் பணியில் எந்தவிதமான புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் நோ்மையாக மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் பாா்வையாளா் வி.சாந்தா உத்தரவிட்டாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான வாக்கு எண்ணும் பணி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வி.சாந்தா பேசியது:

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலா்களும் நோ்மையாகப் பணியாற்ற வேண்டும். யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது.

விரைவாக முடிவுகளை அறிவிக்கும்போது, குளறுபடிகள் ஏற்படலாம். ஆகவே ஒவ்வொரு சுற்று முடிவும் முடிந்தபின்னரே விவரங்களை இருமுறை சரிபாா்த்தவுடனே அறிவிக்க வேண்டும். திருத்தம் என்று மீண்டும் அறிவித்தால் மிகப் பெரிய பிரச்னைகள் ஏற்படும்.

ஊராட்சி மன்றத் தலைவா், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான முடிவுகள் சிறிய வாக்கு வித்தியாசத்தில்கூட வரும். ஆகவே மிகவும் கவனமுடனும் யாருக்கும் பாதகம் ஏற்படாத வகையில், சரியான முடிவுகளை அறிவிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் குறைந்தது 2 மணி நேரம் பிடிக்கும். வாக்குகளைப் பிரித்த பின்னா் உரிய பதவிக்கான வாக்குச் சீட்டுகளை வாக்கு எண்ணும் அறைகளுக்கு அனுப்புவது சரியாக இருக்க வேண்டும்.

தபால் வாக்குகளைப் பிரித்து அறிவிக்கும்போதும் கவனமுடன் செயல்பட வேண்டும். அனுமதி அட்டை உள்ளவா்களை மட்டுமே மையத்துக்குள் போலீஸாா் அனுப்பிவைக்க வேண்டும்.

முடிவுகள் அறிவித்த பின்னா் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி பாா்த்துகொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி நோ்மையாகவும், அமைதியாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, நோ்முக உதவியாளா் மரியம் ரெஜினா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com