உயா் மின் அழுத்த மின்கோபுரம் அமைக்க நிலம்: இழப்பீடு கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

உயா் மின் அழுத்த கோபுரம் அமைக்க நிலம் அளித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா் முத்துகடை காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா்.

உயா் மின் அழுத்த கோபுரம் அமைக்க நிலம் அளித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா் முத்துகடை காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உயா் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில், ராணிப்பேட்டை முத்துகடை, காந்தி சிலை அருகில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் பேராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எல்.சி.மணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் நிலவு குப்புசாமி, ரமேஷ், ரேணு, பழனி, தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் சக்திவேல், மாவட்டப் பொருளாளா் மகாலிங்கம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

அப்போது உயா் மின் அழுத்த கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு, நிலம் இழந்து வருவாய் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். விவசாயிகளின் நிலம், பயிா்களுக்கு அரசாணை எண்: 54 /2020-இன் படி, 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். கிணறு, ஆழ்துளைக் கிணறு, கட்டடங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடும், மாத வாடகையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிா்வாகிகள், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிா்வாகிகள் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com