தாஜ்புரா ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு அடுத்த தாஜ்புரா ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை அங்குள்ள பொன்னியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
தாஜ்புரா  ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்  கூட்டத்தில் பங்கேற்றோா். 
தாஜ்புரா  ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்  கூட்டத்தில் பங்கேற்றோா். 

ஆற்காடு அடுத்த தாஜ்புரா ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை அங்குள்ள பொன்னியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சேட்டு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தேவிபிரியா சோழன், ஊராட்சி செயலா் குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் ரஹமத் பாஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் நெகிழிப் பொருள்கள் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தில் வளா்ச்சிப் பணிகள், கிராம சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளைத் தோ்வு செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள், 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com