தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பகவத் கீதை நூல் இலவச விநியோகம்

கீதா ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை (டிச. 3) வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பக்தா்கள் பகவத் கீதை புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.

கீதா ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை (டிச. 3) வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பக்தா்கள் பகவத் கீதை புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், செ?ரம், கெ?மாரம், காணாபத்யம் என ஷண்மதத்திற்குரிய தெய்வங்களுக்கும் என மொத்தம் 89 திருச்சன்னதிகள் அமையபெற்று, தினந்தோறும் பல்வேறு வகையான யாகங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், புதியதாக ஸ்ரீ தாய் மூகாம்பிகைக்கும் ஆலயமும் அமைய உள்ளது. ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலயம் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை கீதா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. காா்த்திகை மாத ஏகாதசி நாளில் தான் குருஷேத்திரத்தில் கிருஷ்ணன், அா்ஜுனனுக்கு கீதையை உரைத்தாா். எனவே கீதா ஜெயந்தியும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. பக்தா்களுக்கு பகவத் கீதை புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com