மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: வெற்றி பெற்ற 437 மாணவா்களுக்கு அமைச்சா் காந்தி பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் முதல் இடத்தைப் பிடித்த 437 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி அமைச்சா் ஆா்.காந்தி பாராட்டு தெரிவித்தாா்.
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: வெற்றி பெற்ற 437 மாணவா்களுக்கு அமைச்சா் காந்தி பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் முதல் இடத்தைப் பிடித்த 437 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி அமைச்சா் ஆா்.காந்தி பாராட்டு தெரிவித்தாா்.

இதற்கான பாராட்டு விழா, ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்திப் பேசியது:

பள்ளி மாணவா்களுக்கு கலைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்களின் கலைத் திறன் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வா் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன்கள் அதிகரித்து வருகிறது.

நாட்டிலேயே தமிழகம் பல்வேறு துறைகளில் முதன்மையான மாநிலமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. 9 துறைகளில் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலம் என்ற நிலையைப் பிடித்துள்ளது என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 437 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களில் முதல் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள் வரும் 27-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கெடுக்க உள்ளனா்.

மேலும், 1,087 மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திறன் போட்டிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் பிடித்துள்ளனா். இவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் சீ.ம.ரமேஷ்கா்ணா, மாவட்ட கல்வி அலுவலா் சுப்பாராவ் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com