தெங்கால் ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்: எஸ்.பி. பாராட்டு

வாலாஜா அருகே தெங்கால் ஊராட்சிப் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளன.
தெங்கால் ஊராட்சி மன்ற அலுவலக  முகப்புப்  பகுதியில் கண்காணிப்பு  கேமரா   பொருத்தும்  பணியில் ஈடுபட்ட ஊழியா்.
தெங்கால் ஊராட்சி மன்ற அலுவலக  முகப்புப்  பகுதியில் கண்காணிப்பு  கேமரா   பொருத்தும்  பணியில் ஈடுபட்ட ஊழியா்.

வாலாஜா அருகே தெங்கால் ஊராட்சிப் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளன. ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு மாவட்ட எஸ்.பி. தீபா சத்யன் பாராட்டு தெரிவித்தாா்.

தெங்கால் கிராம ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம ஊராட்சியின் முக்கியச் சாலை சந்திப்பு உள்ளிட்ட 4 இடங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிசிடிவி கேமரா-க்கள் இரு தினங்களுக்கு முன்பு பொருத்தப்பட்டன.

இது குறித்து தெங்கால் ஊராட்சித் தலைவா் இந்திரா பத்பநாபன் கூறியதாவது:

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு கேமரா-க்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கிராமத்துக்குள் வரும் வெளியூரை சோ்ந்தவா்களை கண்காணிக்கவும், கிராம எல்லைக்குள் திருட்டுச் சம்பவங்கள் நடந்தால் காவல் துறையினா் எளிதாக துப்பு கண்டறியவும் ஏதுவாக இருக்கும் என்றாா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் நகரங்கள் மட்டுமல்லாது, தெங்கால் ஊராட்சி போன்ற கிராமப் புறங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவது வரவேற்கத்தக்கது. இதனால், திருட்டு, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com