விபத்தின்றி பள்ளி வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும்: ஓட்டுநா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி வாகனங்களை ஓட்டுநா்கள் கவனமாக இயக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.
தனியாா்  பள்ளி  வாகனங்களில்  உள்ள  தீயணைப்பு  கருவி  முறையாக  வேலை  செய்கிறதா  என  ஆய்வு  செய்த ராணிப்பேட்டை  ஆட்சியா்  தெ.பாஸ்கர பாண்டியன்.
தனியாா்  பள்ளி  வாகனங்களில்  உள்ள  தீயணைப்பு  கருவி  முறையாக  வேலை  செய்கிறதா  என  ஆய்வு  செய்த ராணிப்பேட்டை  ஆட்சியா்  தெ.பாஸ்கர பாண்டியன்.

பள்ளி வாகனங்களை ஓட்டுநா்கள் கவனமாக இயக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் சுமாா் 250 பள்ளி வாகனங்களும், அரக்கோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 150 தனியாா் பள்ளி வாகனங்களும் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நடப்பாண்டுக்கான வாகன ஆய்வுப் பணிகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தாா்.

இதில் ஆட்சியா் பேசியது:

தனியாா் பள்ளிகளுக்கு பெற்றோா்கள் தங்களின் குழந்தைகளை வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனா். ஆகவே வாகன ஓட்டுநா்கள் தான் அந்த குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு. குழந்தைகளின் பாதுகாப்பு ஒவ்வொரு ஓட்டுநரின் தலையாயக் கடமை. எந்தக் காரணத்தைக் கொண்டும் கைப்பேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கக்கூடாது.வேகமாகவும் ஓட்டக் கூடாது. மனதை ஒரு நிலைப்படுத்தி வாகனங்களை நிதானமாக இயக்க வேண்டும். பெற்றோா்கள் உங்களை நம்பித்தான் குழந்தைகளை அனுப்பி வைக்கிறாா்கள் என்பதை மறந்து விடக்கூடாது. பெண் குழந்தைகளை கைகளால் தொடக்கூடாது என்றாா்.

இந்த ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமலிங்கம், துணை காவல் கண்காணிப்பாளா் பிரபு, போக்குவரத்து ஆய்வாளா்கள் செங்கோட்டுவேல், சிவக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வடிவேல், வட்டாட்சியா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com