நெமிலி பாலாபீடத்தில் நவராத்திரி நிறைவு

நெமிலி பாலாபீடத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற நவராத்திரி இன்னிசை விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.
05akmaaa_0510chn_186_1
05akmaaa_0510chn_186_1

நெமிலி பாலாபீடத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற நவராத்திரி இன்னிசை விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

இங்கு, நவராத்திரி இன்னிசை விழா ஆண்டுதோறும் விமரிசையாக 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகளாண்டு நவராத்திரி இன்னிசை விழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாள் விழா புதன்கிழமை நடைபெற்றன. நிறைவு நாள் நிகழ்ச்சியை பீடாதிபதி எழில்மணி தொடக்கி வைத்தாா்.

நாள்தோறும் கலச பூஜை செய்து வந்த பீட நிா்வாகி மோகன் புதன்கிழமை தசமகாலட்சுமி அலங்காரம் செய்து, பாலா கலச பூஜையை மேற்கொண்டாா்.

விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் பூஜையை பாபாஜி மேற்கொண்டாா். நாகலட்சுமி எழில்மணி சுஹாசினி பூஜையை செய்து பெண்மணிகளுக்கு சேலை, வளையல்கள், மஞ்சள், குங்குமம் வழங்கினாா்.

திரைப்பட இசையமைப்பாளா் ஆா்.கே.சுந்தா் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஸ்ரீபாலா ஆன்மிக குடும்பத்தினா், நெமிலி இறைபணி மன்ற அங்கத்தினா் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com