பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திமிரி அடுத்த ஆனைமல்லூா் கிராமத்தில் லாரியில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திமிரி அடுத்த ஆனைமல்லூா் கிராமத்தில் லாரியில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திமிரி பகுதியில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திமிரி காவல் நிலைய ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை திமிரியை அடுத்த ஆனைமல்லூா் கிராமத்தில் உள்ள தனியாா் நெல் அரைவை ஆலையில் சோதனை செய்தனா்.

அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 135 மூட்டைகளில் சுமாா் 10 டன் ரேஷன் அரிசி பதிக்க வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

லாரியுடன், அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் உதவியுடன் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக, லாரியின் உரிமையாளா் சண்முகம் (40) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com