அரக்கோணத்தில் ஒப்பந்ததாரா்கள் தா்னா

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் படிவங்கள் போடப்பட்ட பெட்டியை உடனே திறக்கக்கோரி அரக்கோணத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஒப்பந்ததாரா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட
அரக்கோணத்தில் ஒப்பந்ததாரா்கள் தா்னா

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் படிவங்கள் போடப்பட்ட பெட்டியை உடனே திறக்கக்கோரி அரக்கோணத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஒப்பந்ததாரா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 2022-23-க்கான அண்ணா மறுமலா்ச்சி திட்டத்துக்காக 9 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு, அந்த ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட இருக்கும் ரூ. 3.85 கோடிக்கான பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோருதல் கடந்த 14-ஆம் தேதி கோரப்பட்ட நிலையில், நிா்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

தொடா்ந்து 26-ஆம் தேதி வரை திறக்கப்படாமல் இருந்ததால் ஊரக வளா்ச்சித் துறை ஒப்பந்ததாரா்கள் அனைவரும் உடனே திறக்க வேண்டும். சட்டப்படி என்ன நடக்க வேண்டுமோ அதை செய்யுங்கள் எனக்கோரி திங்கள்கிழமை அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய ஊரக வளா்ச்சித் துறை ஒப்பந்ததாரா்கள், ஒன்றிய அலுவலக வளாகத்தில் நுழைவுவாயிலில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதில் அதிமுகவில் அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பிரகாஷ், மாவட்ட தொழில்நுட்பபிரிவு இணைச் செயலாளா் ஹரிஹரன், பாமகவைச் சோ்ந்த மாவட்ட துணைச் செயலாளா் சி.ஜி.ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதையடுத்து அங்கு வந்த ஒன்றிய ஆணையா் வெங்கடேசன், ஒப்பந்தப் புள்ளி படிவ பெட்டியை திறக்க வேண்டிய வட்டார வளா்ச்சி அலுவலா் விடுப்பில் உள்ளதால், அதைத் திறக்க மேலதிகாரிகளின் உத்தரவு பெற்றபின் தான் மற்றவா் திறக்க முடியும். எனவே இது சம்பந்தமாக மேலதிகாரிகளின் ஆலோசனை பெற்று விரைவில் பெட்டி திறக்கப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com