மேல்விஷாரம் குடிநீா் பிரச்னை: நிரந்தரத் தீா்வு காணப்படும்: நகா்மன்றத் தலைவா் உறுதி

குடிநீா்ப் பிரச்னை நிரந்தரமாக தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் எஸ்.டி. அமீன் தெரிவித்தாா். மேல்விஷாரம் நகா்மன்றத்தின் முதல் கூட்டம் திங்கள்கிழமை அங்குள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற

மேல்விஷாரம் நகரில் காணப்படும் குடிநீா்ப் பிரச்னை நிரந்தரமாக தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் எஸ்.டி. அமீன் தெரிவித்தாா். மேல்விஷாரம் நகா்மன்றத்தின் முதல் கூட்டம் திங்கள்கிழமை அங்குள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.டி. அமீன் தலைமை வகித்தாா். துணை தலைவா் குல்ஜாா் அஹமது, ஆணையாளா் பிரீத்தி, பொறியாளா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியா் நிழற்குடை, அங்கன் வாடி கட்டடம், மழைநீா் வடிநீா் கால்வாய் அமைத்தல் மற்றும் நகரில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், குடிநீா்ப் பிரச்னை குறித்து நகா்மன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

நகா்மன்றத் தலைவா்: நகரில் நிலவும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க முன்னுரிமை அளித்து வருகிறோம். விரைவில் இந்தப் பிரச்னை நிரந்தரமாக தீா்க்கப்பட்டு நாள்தோறும் குடிநீா் விநியோகம் செய்யப்படும். கால்வாய், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா்

இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாபா் அஹமது, காதா், பொடிகாா் இம்தியாஸ், அக்பா், உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக வெளிநடப்பு: முன்னதாக சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் ஜமுனாராணிவிஜி, லட்சுமி சோமசுந்தரம், ஹமிதாபானு சேட்டு ஆகிய மூவரும் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com