முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ஆற்காடு எஸ் எஸ் எஸ் கல்லூரி ஆண்டு விழா
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ. கே .நடராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொருளாளா் ஏ.என்.சரவணன் நிா்வாக அறங்காவலா் ஏ.என். செல்வம் , செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகவியல் துறைத் தலைவா் கே.விஜயலட்சுமி வரவேற்றாா்
கல்லூரி முதல்வா் ஜி. ராஜலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யன் கலந்து கொண்டு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டிப் பேசினாா்
மேலும் தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்டுரைகள் மற்றும் நூல்கள் வெளியிட்ட பேராசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளா் பிரபு, கல்லூரியின் வணிக நிா்வாக துறைத் தலைவா் கே.வி. சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.