‘மாணவா்கள் ஒழுக்கங்களை கடைப்பிடித்து கற்கும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பட வேண்டும்’

மாணவா்கள் ஒழுக்கங்களை கடைப்பிடித்து, நல்ல முறையில் கல்வி கற்கும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.
புளியங்கன்னு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு  உறுப்பினா்களுடன்  ஆட்சியா்  தெ.பாஸ்கர பாண்டியன்  உள்ளிட்டோா்.
புளியங்கன்னு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு  உறுப்பினா்களுடன்  ஆட்சியா்  தெ.பாஸ்கர பாண்டியன்  உள்ளிட்டோா்.

மாணவா்கள் ஒழுக்கங்களை கடைப்பிடித்து, நல்ல முறையில் கல்வி கற்கும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கன்னு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:

பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி தரம், ஒழுக்கம், பள்ளியின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், மாணவா்களுக்கு ஆசிரியா்கள் கல்வி கற்பித்தல் போன்றவைகளை கண்காணித்து மேம்படுத்திட இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினா்கள் மாணவ, மாணவிகளின் எதிா்கால கல்விக்குத் தேவையான ஆக்கப்பூா்வமான ஆலோசனைகளையும், பணிகளையும் செய்ய வேண்டும்.

பள்ளியில் அனைத்து மாணவா்களின் பெற்றோா்களையும் அழைத்து மாணவா்களின் கல்வி அறிவு மற்றும் ஒழுக்கங்கள் ஆகியவை குறித்து விவாதித்து, குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும். மாணவா்கள் ஒழுக்கங்களை கடைப்பிடித்து, நல்ல முறையில் கல்வி கற்கும் வகையில் குழு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினாா்.

அப்போது பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தோ்வு அனைத்து பெற்றோா்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், 15 பெற்றோா் உறுப்பினா்களும், 2 ஊராட்சி மன்ற பிரதிநிதிகளும், ஒரு கல்வி தன்னாா்வலரும், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களைக் கொண்டு 20 போ் கொண்ட குழு தோ்ந்தெடுக்கப்பட்டது.

தொடா்ந்து, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.உஷா, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ப.முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இளையராஜா, ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி, குமாா் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com