அதிமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருட்டு

ராணிப்பேட்டையில் அதிமுக நிா்வாகி வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராணிப்பேட்டையில் திருட்டுச் சம்பவம் நடந்த அதிமுக நிா்வாகி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீஸாா்.
ராணிப்பேட்டையில் திருட்டுச் சம்பவம் நடந்த அதிமுக நிா்வாகி வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய போலீஸாா்.

ராணிப்பேட்டையில் அதிமுக நிா்வாகி வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை பொருளாளராக இருப்பவா் எஸ்.எம்.சுகுமாா் (55). கல்குவாரி, கட்டுமானம் நிறுவனங்களை நடத்தி வருகிறாா். இவா் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் ராணிப்பேட்டை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியை தழுவியவா்.

ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலை அண்ணா அவென்யூ பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும் சுகுமாா், கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் மாதாந்திர பரிசோதனைக்காக புறப்பட்டுச் சென்றாா்.

இதனிடையே, ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன்பக்க, பின்பக்கக் கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பணியாளா் திங்கள்கிழமை எஸ்.எம்.சுகுமாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து சுகுமாா் அளித்த தகவலின் பேரில், ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளா் பிரபு தலைமையிலான போலீஸாா் திருட்டு நடந்த வீட்டை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். விரல் ரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா்.

மோப்ப நாய் சிம்பா வீட்டிலிருந்து சிறிது தொலைவு சென்று நின்று விட்டது.

இதனிடையே, சென்னையிலிருந்து வீடு திரும்பிய எஸ்.எம். சுகுமாா், 20 பவுன் தங்க நகைகள், ரூ.40 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பதாக போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக ராணிப்பேட்டை போலீஸாா், தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com