ராணிப்பேட்டை புதிய ஆட்சியா் அலுவலகம் இன்று திறப்பு

ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் ரூ.118.40 கோடியில் கட்டப்பட்ட புதிய ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.

ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் ரூ.118.40 கோடியில் கட்டப்பட்ட புதிய ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கைத்தறி-துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

இந்த விழாவில் அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கட்சிப் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com