முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர பால்குட ஊா்வலம்
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 506 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து மலையடிவாரம் துா்கையம்மன் கோயில் முன்பாக 506 பால்குடங்கள் நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னா் பக்தா்கள் பால்குடங்களுடன் மலை அடிவரத்திலிருந்து ஊா்வலமாக மலையை வலம் வந்து மலை மேல் சென்றனா். அங்கு மூலவருக்கு கோயில் பரம்பரைஅறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால்குட மகா அபிஷேகம் , வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.