தெங்கால் திருகண்டேசுவரா் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை

ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் திரிபுரசுந்தரி உடனுறை திருகண்டேசுவரா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தெங்கால் திரிபுரசுந்தரி உடனுறை திருகண்டேசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருக்கல்யாண  அலங்காரத்தில் காட்சியளித்த  உற்சவா்.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயில், சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பராந்தக சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்டு, புனரமைத்த பெருமைக்குரியது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சீா்வரிசை ஊா்வலம் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, இரவு 7.30 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து, திருமண விருந்து, வாணவேடிக்கை, சுவாமி வீதி உலா நடைபெற்றன.

விழாவில் தெங்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com