சாலைப் பணியாளா்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை: மாவட்ட மாநாட்டில் தீா்மானம்

சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்று சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்று சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை மற்றும் வேலூா் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளா் சங்கம் சாா்பில் மாவட்ட மாநாடு ஆற்காடு தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டிற்கு மாவட்ட தலைவா் எம் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் லோ. சிவசங்கரன், பொருளாளா் ஜெ.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலாளா் கா. பெருமாள் தொடக்க உரையாற்றினாா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. சண்முகராஜா கொடியேற்றி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி, எம்எல்ஏ ஈஸ்வரப்பன், தொழிலதிபா் ஏ.வி.சாரதி, நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் துணைத் தலைவா்

மருத்துவா் பவளக்கொடி, மாவட்டக்குழு உறுப்பினா் காந்திமதி ஆகியோா் பேசினா்.

இதில் மாநிலத் துணைத் தலைவா் பா சண்முகசுந்தரம், செயலாளா் கே தமிழ்ச்செல்வன் தகவல் தொழில்நுட்பக் குழு உறுப்பினா்கள் எஸ். நந்தகுமாா், எஸ். விஜயன் மற்றும் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் .காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மக்கள் நலப்பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com