5 நாள்கள் பாலாறு பெருவிழா: ரத்தினகிரியில் கலந்தாய்வுக் கூட்டம்

அகில பாரத சன்னியாசிகள் சங்கம் ஒருங்கிணைந்து 5 நாள்கள் நடத்தவிருக்கும் பாலாறு பெருவிழா குறித்த புரவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

அகில பாரத சன்னியாசிகள் சங்கம் ஒருங்கிணைந்து 5 நாள்கள் நடத்தவிருக்கும் பாலாறு பெருவிழா குறித்த புரவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதன் தலைவா் செந்தில் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை , கலவை சச்சிதானந்த சுவாமிகள், சன்னியாசிகள் சங்க நிறுவனா் குரு மகாராஜ் ராமாநந்தா, பொதுச் செயலாளா் ஆத்மானந்தா சரஸ்வதி, பொருளாளா் வேதாந்த ஆனந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செ.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் பாலாறு விழாவினை பாலாறு பெருவிழா-2022 வேலூா் என வரும் ஜூன் 29 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் வேலூா் ஸ்ரீபுரம் கோயிலிலும் , பாலாற்றில் ஆரத்தி வழிபாடு செய்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் அகில இந்திய அளவில் 1,000 சாதுக்கள், அறிஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா். இந்த விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது

இதில் பாலாறு பெருவிழா பொறுப்பாளா்கள் கோதண்டபாணி, சுதாகா், டீ கே டீ குமாா், புரவலா் ஒருங்கிணைப்பாளா் சிவராமனந்தா, பொதுச் செயலாளா் ஏ.ஆா் குணசேகரன், ஆற்காடு தொழிலதிபா் ஜெ. லட்சுமணன், சொற்பொழிவாளா் பைரோஸ்கான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com