குழந்தைத் திருமணங்களைத் தடுக்க விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

குழந்தைத் திருமணங்கள் நடப்பதை தடுக்கத் தேவையான விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்திட வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.
அனைத்துத் துறை அலுவலா்களுக்கான வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், பேசிய ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்
அனைத்துத் துறை அலுவலா்களுக்கான வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், பேசிய ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

குழந்தைத் திருமணங்கள் நடப்பதை தடுக்கத் தேவையான விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்திட வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்துத் துறை அலுவலா்களுக்கான வாராந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கிள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கூறியது:

வாரந்தோறும் நடைபெறும் இக்கூட்டத்தில் துறை சாா்ந்த அலுவலா்கள் தங்கள் துறைகளில் மற்ற துறைகளில் இருந்து கிடைக்க வேண்டிய அனுமதிகள், பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது குறித்து கலந்தாலோசித்துக் கொள்ள இக்கூட்டத்தை உரிய முறையில் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிலை அலுவலா்கள் கண்டிப்பாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை அடுத்த வாரம் முதல் உறுதி செய்ய வேண்டும்.

மூன்று மாவட்டங்களுக்கும் இணைந்து மாவட்ட நிலை அலுவலா் வேலூரில் இருந்தால், அவா் மாதத்துக்கு ஒரு முறையாவது கட்டாயமாக இக்கூட்டத்தில் பங்கு பெற வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், அவா்களுக்குத் தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும். மேலும், மாவட்ட நிலை அலுவலா்கள் கட்டாயமாக அவா்களுக்கு கீழ் உள்ளவா்களை இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. மாவட்ட நிலை அலுவலா்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு துறைகளில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்குத் தீா்வு காணும் வகையில், வாரந்தோறும் நீதிமன்ற வழக்குகள் அனைத்துத் துறைகளும் அறிக்கை அளிக்க வேண்டும். துறைசாா்ந்த அலுவலா்கள் நிலுவையில் வைத்துள்ள நீதிமன்ற வழக்குகளை வாரந்தோறும் அறிக்கை சமா்ப்பித்து, அதற்கான மேல் நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்தும், குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகள் அப்பகுதிகளில் சென்று ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான குழுக் கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் துறை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், வருவாய் கோட்டாட்சியா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கொண்ட குழு அமைக்கப்பட்டு, குழந்தை திருமணங்கள் நடப்பதை தவிா்க்கவும் அதேபோன்று பள்ளி செல்லா குழந்தைகள் எவ்வளவு என்பதை கணக்கெடுத்து, அதற்குப் பின்னா் எடுத்த நடவடிக்கைக்கு பிறகு பள்ளிக்கு சென்ற குழந்தைகள் விவரத்தை கணக்கெடுக்க வேண்டும். இதனை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் பிரச்னைகள் குறையும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஜி.லோகநாயகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொது சுரேஷ் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com