அரக்கோணத்தில் ரூ.4 கோடி வீட்டுவசதி வாரிய இடம் மீட்பு

அரக்கோணத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான இடத்தை வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
அரக்கோணம் ஜோதி நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 4,650 சதுர அடி ஆக்கிரமிரப்பு இடத்தைப் பாா்வையிட்ட வருவாய்த் துறையினா்.
அரக்கோணம் ஜோதி நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 4,650 சதுர அடி ஆக்கிரமிரப்பு இடத்தைப் பாா்வையிட்ட வருவாய்த் துறையினா்.

அரக்கோணத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான இடத்தை வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

அரக்கோணம் ஜோதி நகரில் கடந்த 1982 -ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, நிலத்தை வழங்கிய அனைவருக்கும் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

அந்த இடத்தில் குடியிருப்புகளும் கட்டப்பட்டு, ஒதுக்கீட்டாளா்களுக்கு அளிக்கப்பட்டு தற்போது அந்த இடம் ஒதுக்கீட்டாளா்களுக்கு வாரியத்தால் கிரையமும் செய்யப்பட்டுவிட்டது.

அந்த இடத்தில் குடியிருப்புகளுக்கிடையே வணிக வளாகம் கட்டவும் வீட்டு வசதி வாரியத்தினா் நிலத்தைக் கையகப்படுத்தியிருந்தனா். அந்த வணிக வளாக இடம் அப்போது ஆக்கிரமிப்பில் இருந்ததாலும், இதுதொடா்பாக ஆக்கிரமிப்பாளா்கள் நீதிமன்றத்துக்குச் சென்ாலும் அந்த இடத்தை வாரியத்தினா் கையகப்படுத்தாமல் இருந்து வந்தனா்.

இந்த வழக்கில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சாதகமாக தீா்ப்பு வந்ததையடுத்து, அந்தக் குறிப்பிட்ட இடத்தில் (மொத்தம் 4,650 சதுரஅடி) உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வேலூா் பிரிவு செயற்பொறியாளா் கணேசன், உதவிச் செயற்பொறியாளா்கள் விஜயகுமாா், சீனிவாசன், அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ், நகரக் காவல் ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்ட போலீஸாா் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க வெள்ளிக்கிழமை வந்தனா்.

அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தவா்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த நிலையில், அவா்களை வெளியேற்றி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

அரக்கோணம் நகரின் முக்கிய சாலையான காந்தி ரோடு, வீட்டு வசதி வாரிய பிரதான சாலை சந்திக்கும் இடத்தில் இருந்த 4,650 சதுர அடி இடம், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு ரூ.4.5 கோடி இருக்கும் என நகர நில அளவைத் துறையினா் தெரிவிவித்தனா்.

அந்த குறிப்பிட்ட இடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினா் வணிக வளாகம் கட்ட இருப்பதாகவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com